தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பைக்கூளமாக இருக்கிறது செல்வசிந்தாமணி குளம்

குப்பைக்கூளமாக இருக்கிறது செல்வசிந்தாமணி குளம்

குப்பைக்கூளமாக இருக்கிறது செல்வசிந்தாமணி குளம்


UPDATED : நவ 22, 2026 05:21 PM

ADDED : நவ 22, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 05:21 PM ADDED : நவ 22, 2026 05:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. இடையர்பாளையம் சாலை சேதம்



குனியமுத்துாரிலிருந்து சுந்தராபுரம் செல்லும் சாலை, இடையர்பாளையம் சாலை முழுவதும் பல மாதங்களாக மோசமாக உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்கின்றன. விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும்.

– விஜய், சுந்தராபுரம்.

2. ஆர்.எஸ்.புரத்தில் கழிவுநீர் தேக்கம்



ஆர்.எஸ்.புரம் 73வது வார்டு ஏ.ஏ.ஸ்கீம் ரோடு நாதன் நகர் 2வது தெருவில் சாக்கடை அடைப்பால் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.

– ரமேஷ், ஆர்.எஸ்.புரம்.

3. எல்.ஐ.சி. காலனியில் குப்பை குவியல்



பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் சாலை அருகே பொது இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

– சுரேஷ்குமார், எல்.ஐ.சி. காலனி.

4. ராமலிங்க நகரில் நாய் தொல்லை



கே.கே.புதுார் ராமலிங்கம் நகர் 3வது தெரு பூங்காவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பூங்கா கதவுகள் எப்பொழுதும் திறந்தே உள்ளது. பூங்காவை நன்கு பராமரிக்க வேண்டும்.

– சுப்பன் மணி, ராமலிங்க நகர்.

5. வரதராஜபுரத்தில் தண்ணீர் வீண்



மாநகராட்சி வார்டு எண் 60, வரதராஜபுரம் வடக்கு வீதி 2ல் உள்ள உப்பு தண்ணீர் குழாய் உடைந்து நீர் வீணாக சாக்கடையில் வழிந்தோடுகிறது.

– வீரமணி, வரதராஜபுரம்.

6. செல்வ சிந்தாமணி குளத்தில் சேரும் குப்பை



வார்டு எண் 78, செல்வ சிந்தாமணி குளத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், தேவையற்ற கழிவுகள் கொட்டப்பட்டு, குளம் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகிறது. குளத்தின் நீர்நிலையும், சுற்றுப்புறச் சூழலும் மாசடைந்து காணப்படுவதால், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

– நவுபல், கோவை.

7. ஆர்.எஸ்.புரத்தில் உடைந்துள்ள சாக்கடை மூடி



ஆர்.எஸ்.புரம், குமாரசாமி குளத்திற்கு அருகில் வேடபட்டி சாலையில் உள்ள சாக்கடை மூடும் ஓடுகள் உடைந்துள்ளன. அவற்றை சீரமைத்து வடிகால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

– ராஜ்குமார், ஆர்.எஸ்.புரம்.

8. மணியகாரம்பாளையத்தில் இருள்



இடிகரை மணியகாரம்பாளையம் ஜீ.ஜே.வி. நகரில் 20க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

– காளியப்பன், மணியகாரம்பாளையம்.

9. பெரியநாயக்கன்பாளையத்தில் மக்கள் சிரமம்



பெரியநாயக்கன்பாளையம் நெடுஞ்சாலை பிரிவிலிருந்து பழைய புதுார் செல்லும் சாலையின் தொடக்கத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

– சத்தியமூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம்.

10. நரசிம்மநாயக்கன் பாளையத்தில் தார் சாலை இல்லை



நரசிம்மநாயக்கன் பாளையம் புதுப்பாளையம் ரோடு ஐடியல் பள்ளி அருகில் உள்ள பகவான் கார்டன் பேஸ் 4ல் தார் சாலை வசதி இல்லை. இங்கு 70 குடும்பங்கள் வசிக்கின்றன. பாம்பு நடமாட்டம் அதிகமாக உள்ளது.

– மகேஷ்வரி, நரசிம்மநாயக்கன்பாளையம்.

11. பூம்புகார் நகரில் மோசமான சாலை



பூம்புகார் நகரில், பேங்க் ஆப் பரோடா அருகிலிருந்து சாய்பாபா கோயில் செல்லும் சாலை, மோசமான நிலையில் உள்ளது. குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை, முறையாக மீண்டும் மூடப்படவில்லை. மழைக்காலங்களில், பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

– திலகா, பூம்புகார் நகர்.

12. எம்.ஜி.ஆர். நகரில் சாலையில் பள்ளம்



எம்.ஜி.ஆர். நகர் முதல் வீதியில் சாலை பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

– தினேஷ்குமார், எம்.ஜி.ஆர்.நகர்.

13. ரயில் நிலையத்தில் லிப்ட் உபயோகத்தில் இல்லை



கோவை ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக இரண்டு, மூன்றாம் நடை மேடைக்கு செல்லும் தானியங்கி இயந்திரம் (லிப்ட்) வேலை செய்யவில்லை. அதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

– ராதாகிருஷ்ணன், பேரூர்.

14. ஹோப்ஸில் குடிநீர் வீண்



ஹோப்ஸ் அருகில் அவிநாசி சாலையில் இருத்து 500 அடி துாரத்தில் மசக்காளிபாளையம் செல்லும் சாலையில், பெட்டிக்கடையின் முன் செல்லும் குடிநீர் பைப்லைன் பிரச்னையால் பல நாட்களாக நீர் வீணாகி வருகிறது.

– ராமசாமி, டி.ஜே.நகர்.

15. நேரு நகரில் ஒளிரா விளக்கு



இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட், நேரு நகரில் 2 வாரமாக தெரு விளக்கு எரியவில்லை.

– திவ்யா, நேரு நகர்.

16. நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் புதர்



மாதகராட்சி 2வது வார்டு வெள்ளக்கிணறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2ல் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தின் இரு புறமும் புதர் மண்டி கிடக்கிறது. பாம்புகள் அதிகளவில் உள்ளன.

– மணிமாறன், கோவை.

17. நஞ்சப்பா ரோட்டில் வாகன ஓட்டிகள் அவதி



நஞ்சப்பா ரோடு மேம்பாலம் கீழே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள ஸ்ப்ரிங்ளரில் இருந்து தண்ணீர் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுகிறது.

– உன்னிகிருஷ்ணன், நஞ்சப்பா ரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us