/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் வளம் காக்க விழிப்புணர்வு பேரணி
/
மண் வளம் காக்க விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 28, 2025 09:55 PM

கோவை; ஜமா அத்தே இஸ்லாமியின் குழந்தைகள் அமைப்பு சார்பில், நாடு முழுவதும், 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி மற்றும் சுற்றுச் சூழல் இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம், கோவை கரும்புக்கடை பகுதியில் நடந்தது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மரக்கன்று நடுதல், இயற்கை விழிப்புணர்வு ஓவியப்போட்டி, இயற்கை குறித்து கதை சொல்லும் போட்டிகள், உட்பட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த பிரசாரத்தின் நிறைவாக கோவை கரும்புக்கடை பகுதியில் விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. இஸ்லாமிய மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கி இந்த பேரணியை கோவை வனச்சரக அதிகாரி பிரபு, கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அப்ஸானா மற்றும் ஜமா அத்தே இஸ்லாமி கோவை நகரத்தலைவர் உமர்பாருக் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
கரும்புக்கடை முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, இஸ்லாமியப் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணியில் குழந்தைகள் மரங்கள், செடிகள், மலர்கள், காய் கனிகள், விவசாயிகள் போல வேடமிட்டு வந்து, பொது மக்களை வெகுவாக கவர்ந்தனர்.