/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் பயன் குறைப்போம் விழிப்புணர்வு பேரணி
/
மின் பயன் குறைப்போம் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 02, 2025 10:37 PM

கோவை; தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் கோவை மாநகர் வட்டம் சார்பில், மின் சிக்கன வார விழா 'மின்பயன்பாட்டை குறைப்போம்; மின் விரயத்தை தடுப்போம்' என்பதை மையமாக கொண்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கோவை அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணி அண்ணா சிலை பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்துதல், மின் சேமிப்பின் அவசியம், தரமான மின் ஒயர்களை பயன்படுத்துதல் உட்பட மின்சிக்கனம், பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும், நோட்டீஸ் வினியோகித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில், கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி, மேற்பார்வை பொறியாளர் சதிஷ்குமார், செயற்பொறியாளர்கள் சிவதாஸ், பசுபதீஸ்வரன், பழனிசாமி, உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

