/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணிப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி
/
துணிப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 18, 2025 11:16 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை பயன்படுத்த வேண்டும் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், புதுடில்லி சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், மாநில சுற்றுச்சூழல் கல்வித் திட்டம், தேசிய பசுமைப் படை சுற்றுச்சூழல் மற்றும் சேவாலயம் அறக்கட்டளை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சீ.மலையாண்டி பட்டிணம் அரசு உயர்நிலை பள்ளியில் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் (பொறுப்பு) திருஞானம் தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை மற்றும் அறிவியல் ஆசிரியர் ரவிக்குமார், 'பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்து' என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, மாணவர்கள், பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, விழிப்புணர்வு பேரணி நடத்தி துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காஞ்சனா, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

