/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசிலிங்கம் பல்கலையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
அவிநாசிலிங்கம் பல்கலையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அவிநாசிலிங்கம் பல்கலையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அவிநாசிலிங்கம் பல்கலையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : அக் 29, 2025 12:40 AM

கோவை: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ( சி.எஸ்.ஐ. ஆர்.,) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ.,) உடன் இணைந்து, 'ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான காலணிகளை மாற்றுதல் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா 2047 முன்முயற்சி' என்ற கருப்பொருளில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவம் சார்ந்த துணை உடல்நல அறிவியல் படிப்புகள் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இணைந்து, அவினாசிலிங்கம் பல்கலையில் இக்கருத்தரங்கு நடந்தது.
பல்கலை துணைவேந்தர் பாரதி பேசுகையில், ''2047ம் ஆண்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும்போது, நாடு ஆரோக்கியமான மக்கள்தொகையையும் முன்னிறுத்த வேண்டும்,'' என்றார்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சரஸ்வதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குனர் லலிதா, மருத்துவம் சார்ந்த துணை உடல்நல அறிவியல் படிப்பு துறை ஒருங்கிணைப்பாளர் உமாதேவி, உதவி பேராசிரியர் காலேஸ்வரி, நிதியுதவி ஆராய்ச்சி உதவி டீன் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

