/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையில்லா போகியை கொண்டாட விழிப்புணர்வு
/
புகையில்லா போகியை கொண்டாட விழிப்புணர்வு
ADDED : ஜன 12, 2025 11:07 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி மற்றும் பொங்கல் கொண்டாட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு பகுதியில், புகையில்லாத போகி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினசரி மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை பேரூராட்சி தலைவர் கதிர்வேல் துவக்கி வைத்தார்.
இதில், மாசு இல்லாத பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுவெளியில் கொட்டப்படும் பழைய பொருட்கள், கழிவு, வாகன டயர்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் ஆடைகள் போன்றவைகளை எரிப்பதால் ஏற்படும் மாசு குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அங்கு குப்பை தரம் பிரித்து கொட்ட தனித்தனியாக குப்பை தொட்டி வைக்கப்பட்டது. போகி பண்டிகை நாட்ளில் உபயோகம் இல்லாத பொருட்களை கொட்ட, பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டு இடத்தில் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவை பொது வெளியில் கொட்டாமல், குப்பை சேகரிப்பு மையத்தில் வழங்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.