/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு
/
தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு
ADDED : ஆக 19, 2025 09:29 PM
ஆனைமலை:
கோட்டூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 'ஆல் தி சில்ரன் அறக்கட்டளை' சார்பில், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்ட மனநல திட்ட ஆலோசகர் சிவா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலர் சேரன், செவிலியர்கள், கிராம சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊர்நல அலுவலர் சரஸ்வதி, கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களிடம், தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், தாய்ப்பால் நன்கொடை குறித்து விளக்கினார்.
தாய்ப்பால் நன்கொடை குறித்து விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.