/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணில் உள்ள சத்துகளை பாதுகாக்க விழிப்புணர்வு
/
மண்ணில் உள்ள சத்துகளை பாதுகாக்க விழிப்புணர்வு
ADDED : டிச 06, 2024 11:27 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோடங்கிபாளையம் வருவாய் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த, உலக மண் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு, மண் வளத்தினை மேம்படுத்துவதற்கான உத்திகள் பற்றி பேசினார்.
குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் அதிக அளவு விவசாயிகள் ஈடுபட வேண்டும். பஞ்சகாவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பது குறித்தும், அதனை எவ்வாறு நிலத்தில் இடவேண்டும் என்பது குறித்தும் கூறினார்.
வேளாண் அலுவலர் (உரப் பகுப்பாய்வு கூடம், கோவை) ருக்குமணி கூறுகையில், மண்ணில் உள்ள சத்துக்கள் பேரூட்டம், நுண்ணூட்டம், மண்வளத்தை பேணுவது எப்படி, மண் மாதிரி எடுப்பது மற்றும் மண் பரிசோதனை ஆய்வுப் படி, உரம் இடுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
மண்ணில் உள்ள அங்கக கரிமச்சத்து மற்றும் பேரூட்டம், நுண்ணூட்டம் அவற்றின் அளவு மற்றும் அவற்றை இழக்காமல் இருக்க என்னென்ன யுக்திகள் கடைப்பிடிக்க வேண்டும். தண்ணீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என, பேசினார்.
நிகழ்ச்சியில், கோடங்கிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில், விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை உதவி வேளாண்மை அலுவலர் உலகநாதன் ஏற்பாடு செய்தார்.