/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவதை தவிர்க்க விழிப்புணர்வு
/
குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவதை தவிர்க்க விழிப்புணர்வு
குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவதை தவிர்க்க விழிப்புணர்வு
குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவதை தவிர்க்க விழிப்புணர்வு
ADDED : ஆக 28, 2025 05:44 AM
வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், வனவிலங்குகளையும், அடர்ந்தகாடுகளையும் பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. எஸ்டேட் பகுதியில் குழந்தைகளை சிறுத்தை கவ்வி செல்வதால், உயிரிழப்பு ஏற்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் திறந்தவெளியில் இறைச்சிக்கடைகள் செயல்படுகின்றன. இறைச்சிக்கழிவுகளை திறந்துவெளியில் வீசப்படுவதால் சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது.
திறந்தவெளியில் செயல்படும் இறைச்சிக்கடைகளை, நகராட்சி அதிகாரிகளும், தனியார் எஸ்டேட் நிர்வாகங்களும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சிக்கழிவை திறந்தவெளியில் வீசுவதை தவிர்த்து, பாதுகாப்பாக குழிதோண்டி புதைக்க வேண்டும். வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், பூனை, கோழிகள் வளர்ப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவிற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

