/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நிபா' பரவல் தடுக்க விழிப்புணர்வு ; எல்லை மக்களுக்கு எச்சரிக்கை
/
'நிபா' பரவல் தடுக்க விழிப்புணர்வு ; எல்லை மக்களுக்கு எச்சரிக்கை
'நிபா' பரவல் தடுக்க விழிப்புணர்வு ; எல்லை மக்களுக்கு எச்சரிக்கை
'நிபா' பரவல் தடுக்க விழிப்புணர்வு ; எல்லை மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 15, 2025 09:59 PM
பெ.நா.பாளையம்; கேரளாவில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், தமிழக-கேரளா எல்லையில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்கு பரவக்கூடியது. இந் நோய் உண்டாக்கும் வைரஸ், பழந்தின்னி வவ்வால்கள் வாயிலாக பெருக்கமடைகிறது. வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் வாயிலாகவும், மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பன்றிகளை குடியிருப்பு பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்பட்ட பன்றிகள் காணப்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி உரிய ஆலோசனை, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.