/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேலாண்மை குழுவுக்கு 29ல் விழிப்புணர்வு பயிற்சி
/
மேலாண்மை குழுவுக்கு 29ல் விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஆக 26, 2025 10:50 PM
கோவை; பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அதன் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பு கல்வியாண்டுக்கான இரண்டாவது பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 29ல் நடைபெறுகிறது. பள்ளி உறுப்பினர்கள் தலைமையாசிரியருடன் இணைந்து, அடிப்படை வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பள்ளி மேம்பாடு குறித்து கட்டாயம் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் இத்தகைய விவாதங்கள் முழுமையாக நடைபெறுவதில்லை என்றும், பள்ளி மேலாண்மை குழு நோக்கம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு குழு முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பள்ளிகளின் அடிப்படை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, கோவை மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கக் கருத்தாளர் அருளானந்தம் தெரிவித்தார்.