ADDED : மார் 09, 2024 08:12 AM

கோவை : கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில்(கே.ஐ.டி.,), 'சமூகம் 2.0 - ஸ்மார்ட் கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரிணாமம்' என்ற பெயரில், மகளிர் ேஹக்கத்தான் நடந்தது.
கல்லுாரி தலைவர் பொங்கலுார் பழனிசாமி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் ரமேஷ் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் இருந்து, 72 கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 1233 மாணவியர், 352 அணிகளாக பங்கேற்றனர். தொழில்நுட்ப பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அவினாசிலிங்கம் பல்கலையின் உத்ரா, தேவதா மற்றும் நேரு இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியின் சரண்யா, அனுஜா, ஷாஹின் முதல் பரிசும், கே.ஐ.டி., கல்லுாரி மாணவியர் பிரியதர்ஷினி, சுர்திகா, மதுமிதா இரண்டாம் பரிசும், விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியர் அபிநயா, ஜெயஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்,'' என்றார்.
குஜராத் ஆத்மியா பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், கோயம்புத்துார் புரொபல் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் வித்யா செந்தில்குமார், டசால்ட் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவன இயக்குனர் ரவிகுமார், கொடிசியா தலைவர் திருஞானம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
