/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழா ;பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
/
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழா ;பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழா ;பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழா ;பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 21, 2024 11:35 PM

பொள்ளாச்சி;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் கக்கடராய பெருமாள் கோவிலில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், 'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம்' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும், பெண்களுக்கு கோலப்போட்டியும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, இன்று காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், காலை, 9:45 மணிக்கு தீபாராதனை, காலை, 10:00 மணிக்கு ராமபிரான் பஜனை, காலை, 11:00 மணிக்கு கும்பாபிேஷக நேரலை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தனபாலகிருஷ்ணன் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த, 1990ம் ஆண்டுகளில் கோவில்களில் பூஜை செய்து, பல லட்சம் செங்கல்கள் அனுப்பப்பட்டன. அதில், எங்களது பகுதியில் உள்ள கக்கடராய பெருமாள் கோவிலில், செங்கல் பல நாட்கள் வைத்து பூஜை செய்து அனுப்பப்பட்டது.
தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும் சூழலில், அதே நேரத்தில் இங்கு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாட்கள் கனவு நினைவான மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கும்பாபி ேஷக விழாவை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
* பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம், 12:20 மணிக்கு மகாதீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ேஷக விழாவையொட்டி, 24மனை தெலுங்குசெட்டியார் மகாஜன சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில் காலை, 11:00 மணிக்கு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு ராஜாமில் ரோடு தனியார் ேஹாட்டல் அருகே அன்னதானம் நடக்கிறது.
இதே போன்று, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஹிந்து அமைப்புகளும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவை கொண்டாட கோவில்களில், ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
உடுமலை
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், இன்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாமகீர்த்தனம், வீதி பஜனை நடைபெறுகிறது.