/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுத பூஜை கொண்டாட்டம்; சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
/
ஆயுத பூஜை கொண்டாட்டம்; சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ஆயுத பூஜை கொண்டாட்டம்; சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ஆயுத பூஜை கொண்டாட்டம்; சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : அக் 01, 2025 11:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நவராத்திரி விழாவையொட்டி கடந்த ஒரு வார காலமாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவில்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனால், திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றுமுன்தினமே சத்திரம் வீதி மற்றும் கடை வீதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கினர். நேற்று கடைகளில் பொருட்களை சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பூக்கள், தோரணங்களால் அலங்கரித்து வழிபாடு செய்தனர்.
பள்ளி மாணவர்களது பாட புத்தகங்கள், சுவாமி அறையில் வைத்து பூஜை செய்து, சுண்டல் உள்ளிட்டவை படையலிட்டு வழிபாடு செய்தனர். இன்று கோவில்கள் மற்றும் பள்ளிகளில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சியோடு மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆயுதபூஜையையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.