/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுர்வேத மருத்துவமனையில் மசாஜ் சென்டர் : உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
/
ஆயுர்வேத மருத்துவமனையில் மசாஜ் சென்டர் : உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
ஆயுர்வேத மருத்துவமனையில் மசாஜ் சென்டர் : உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
ஆயுர்வேத மருத்துவமனையில் மசாஜ் சென்டர் : உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
பொள்ளாச்சி : ஆயுர்வேத மருத்துவமனை என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சூளேஸ்வரன்பட்டியில் ஆயுர்வேத மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அங்கு, சட்டவிரோத செயல் நடப்பதாக பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய ரெய்டில், மருத்துவமனையினுள் பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். போலீசார் விசாரணையில் மசாஜ் சென்டர் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆயுர்வேத டாக்டர் எடிசன் உள்ளிட்ட ஏழு பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியது: ஆயுர்வேத மருத்துவமனையில் ரெய்டு நடத்திய போது, அதன் உரிமையாளர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த எடிசன் (44), அவரது மனைவி சைலா(43), கேரளாவை சேர்ந்த லட்சுமி, சுமதி, வித்யா, நைசி, பாலக்காட்டை சேர்ந்த வாடிக்கையாளர் அந்தோணி(39) ஆகியோர் இருந்தனர். ஆயுர்வேத மருத்துவமனை என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர். மருத்துவமனையின் அறைகளில் சட்டவிரோதமாக பெண்களை வைத்து தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த பெண்களுக்கு எந்த தகவலும் தெரியாததால் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். எடிசன், அவரது மனைவி சைலா, வாடிக்கையாளர் அந்தோணி ஆகியோரை கைது செய்துள்ளோம், என்றனர்.