ADDED : ஜன 08, 2026 05:17 AM

பாலக்காடு: கேரள மாநிலம், கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ளது புலிக்கோடு ஐயப்பன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆறாட்டு உற்சவம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து உஷ பூஜை, லட்சார்ச்சனை நடந்தது.
மதியம், 2:00 மணிக்கு ஸ்ரீ மூர்த்தி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம் முழங்க முத்து மணி குடைகளும் ஆடை ஆபரணங்களும் அணிந்த யானைகளின் அணிவகுப்புடன் உற் சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தது.
தொடர்ந்து, மாலையில் உற்சவருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து நாதஸ்வரம் நிகழ்ச்சியும், 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பு நடந்தது.
இன்று காலை நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நிறைவடைகிறது.
