sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அய்யப்பன் மாலை தயாரிப்போர் கவலை

/

 அய்யப்பன் மாலை தயாரிப்போர் கவலை

 அய்யப்பன் மாலை தயாரிப்போர் கவலை

 அய்யப்பன் மாலை தயாரிப்போர் கவலை


ADDED : நவ 16, 2025 12:46 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை: அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அணியும், துளசி மணிமாலை தயாரிப்பு, படுபிசியாக நடக்கிறது, காரமடை திம்மம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரில்.

இந்த துளசி மணி மாலைகளை நரிக்குறவர் சமுதாயத்தினர், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து, கடைகளில் மொத்தமாக விற்பனை செய்கின்றனர். மாலை தயாரிக்க பயன்படும் காப்பர் கம்பியின் விலை உயர்ந்து கொண்டே செல்வதுதான், இவர்களின் இப்போதைய வாழ்வாதார கவலை.

இப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டு சுத்தமான காப்பர் கம்பி, ஒரு கிலோ 1,000 ரூபாய் வரை விற் பனை ஆனது. தற்போது 1,900 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

மணியின் இரண்டு பக்கமும் வைக்கப்படும் கோல்ட் கலர் கப், ஒரு கிலோ கடந்த ஆண்டு, 450 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 950 ரூபாய்.

ஸ்டீல் கப் கடந்த ஆண்டு, 600 ரூபாய்க்கு விற்பனையானது. இப்போது, 1200 ரூபாய். 108 துளசி மணிகள் கொண்ட ஒரு சரம், கடந்தாண்டு ஏழு ரூபாய்க்கு விற்றது.

தற்போது, 25 ரூபாய். இப்படி துளசி மணி மாலை உற்பத்திக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையும், பல மடங்கு உயர்ந்துள்ளன.

ஒரு மாலை உற்பத்தி செய்ய அடக்க விலை, நூறு ரூபாய் ஆகிறது. ஆனால் கடைக்காரர்கள் ஒரு மாலைக்கு, 80 ரூபாய் மட்டுமே தருகின்றனர்.

கடைக்காரர்கள் ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்கிறார்கள். மூலப் பொருட்களை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க, பணவசதி இல்லை. அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு, அவர் கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us