/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளிடம் நல்லெண்ண குரல்
/
குழந்தைகளிடம் நல்லெண்ண குரல்
ADDED : நவ 16, 2025 12:44 AM

தி ருக்குறள் வழி நடந்தால், ஒரு மனிதனுக்கு நல்லொழுக்கம் தானாக வரும்; ஆளுமை அதிகரிக்கும் என்கிறார், சுண்டக்காமுத்துார் 'பி அண்ட் டி' காலனியில் வசிக்கும் விரிவுரையாளர் குண சந்திர போஸ்.
தன் வீட்டில் உள்ள அறைகளில், அன்புடைமை, பண்புடைமை, ஒழுக்கமுடைமை, கல்வி, கேள்வி, மக்கட்பேரு, நட்பு, வாய்மை உட்பட அதிகாரங்களில் இருக்கக் கூடிய சில குறள்களை, ப்ளக்ஸ் அடித்து ஒட்டி வைத்திருக்கிறார்.
இவருடைய குழந்தைகள், தினமும் அந்த திருக்குறளை படித்து, தங்களை உருவேற்றிக்கொள்கின்றனர்.
''திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எனக்கு, படிக்கும் வயதிலேயே திருக்குறள் மீது தீராத ஆர்வம். பள்ளிகளில் நடக்கும் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் பங்கேற்பேன். என் குழந்தைகள் நலனுக்கு, வீட்டில், முக்கியமான அதிகாரங்களில் இருந்து 200 திருக்குறள்களை ஒட்டி வைத்துள்ளேன்.
என் இரு குழந்தைகள், வீட்டில் ஒட்டி வைத்திருக்கும், திருக்குறள் முகத்தில் தான் விழிப்பார்கள். வரவேற்பறையிலும் திருக்குறள் இடம் பிடித்திருக்கிறது.
வாழ்வியல் நெறிகளை திருக்குறள் அருமையாக கற்றுத் தருகிறது. இதை முழுவதுமாக கற்றுத் தேர்ந்தாலே, குற்றங்கள் நடப்பதற்கு வழியில்லை,'' என்கிறார் குணசந்திர போஸ்.

