/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடம்புக்கு மட்டும்தான் பாடி லோஷன்... முகத்துக்கு 'நோ'
/
உடம்புக்கு மட்டும்தான் பாடி லோஷன்... முகத்துக்கு 'நோ'
உடம்புக்கு மட்டும்தான் பாடி லோஷன்... முகத்துக்கு 'நோ'
உடம்புக்கு மட்டும்தான் பாடி லோஷன்... முகத்துக்கு 'நோ'
ADDED : நவ 16, 2025 12:44 AM

ப னிக்காலம் வந்துவிட்டாலே போதும், நம் ஸ்கின் வறண்டு போக ஆரம்பித்துவிடும். உடனே நாம் கையில் எடுக்கும் ஒரே அஸ்திரம், பாடி லோஷன் தான்.
ஆனால், நம்மில் பலர் செய்யும் ஒரு பெரிய தவறு, அந்த பாடி லோஷனை அப்படியே முகத்துக்கும் சேர்த்து 'அப்ளை' செய்வதுதான்.
ஐயோ, அப்படி மட்டும் செய்து விடாதீர்கள்! என எச்சரிக்கிறார் அழகுகலை நிபுணர் இலக்கியா.
நமது உடம்பில் உள்ள சருமத்தின் தன்மையும், முகத்தில் உள்ள சருமத்தின் தன்மையும் வேறு. முக சருமம் மிகவும் சென்சிட்டிவ். குறிப்பாக, 'அப்பர் லிப்' (மேல் உதடு) போன்ற பகுதிகள் மிகவும் மென்மையானவை. தடிமனான தோல் உள்ள, உடலுக்காக தயாரிக்கப்பட்ட லோஷனை, முகத்தில் பயன்படுத்தும்போது, அது அலர்ஜி ஏற்படுத்தவே வாய்ப்பு அதிகம்.
அதேபோல்தான் தேங்காய் எண்ணெயும். இதை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், சில சரும வகைகளுக்கு ஒத்துவராது. தொடர்ந்து பயன்படுத்தும்போது, கருமை நிறமாக (பிக்மென்டேஷன்) மாற வாய்ப்புள்ளது.
அப்ப முகத்துக்கு? முகத்துக்கு எப்போதுமே மாய்ஸ்ச்சரைசர் கிரீம் மட்டும்தான் ஒரே தீர்வு. உங்கள் ஸ்கின் 'ஆயிலி ஸ்கின்' ஆக இருந்தாலும் சரி, 'வறண்ட சருமமாக' இருந்தாலும் சரி, நீங்கள் 'வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைசர் கிரீம் பயன்படுத்துவதுதான் சிறந்தது. இது, முகத்தின் ஈரப்பதத்தை நாள் முழுவதும் தக்க வைக்கும் என்கிறார் இலக்கியா.

