/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பித்தளை இஸ்திரி பெட்டி வந்தது வேசம்மாவின் வேதனை தீர்ந்தது!
/
பித்தளை இஸ்திரி பெட்டி வந்தது வேசம்மாவின் வேதனை தீர்ந்தது!
பித்தளை இஸ்திரி பெட்டி வந்தது வேசம்மாவின் வேதனை தீர்ந்தது!
பித்தளை இஸ்திரி பெட்டி வந்தது வேசம்மாவின் வேதனை தீர்ந்தது!
ADDED : நவ 16, 2025 12:45 AM

நா ம் மிகவும் எதிர்பார்த்த ஒருவர், குறிப்பிட்ட நேரத்தில் உதவாமல் போகலாம். யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென ஒருவர் வந்து உதவுவார். இப்படித்தான் வேசம்மாவுக்கு உதவியுள்ளார் குமார்.
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியில், துணிகளை இஸ்திரி செய்யும் வேசம்மா, நல்ல இஸ்திரி பெட்டியின்றி சிரமப்படுவது குறித்து, கடந்த வாரம் 'வாழ்க்கை' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை கண்ட, ஈச்சனாரியை சேர்ந்த குமார், உடனடியாக, வேசம்மாவை தேடிச் சென்று, இரும்பு பெட்டி வேண்டுமா இல்லை பித்தளையால் ஆன இஸ்திரி பெட்டி வேண்டுமா என்று கேட்டுள்ளார்.
பித்தளையாக இருந்தால், நீண்ட வருடங்களுக்கு தாங்கும் என்று வேசம்மா தெரிவித்ததால், அதை வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சியில் திணறடித்து விட்டார்.
வேசம்மா கூறுகையில், ''என் மகன் இறந்து விட்டான் என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு, மகனாக இருந்து, ஈச்சனாரியை சேர்ந்த குமார் உதவியுள்ளார். இதற்கு காரணம், 'தினமலர்' பத்திரிகை தான். மறக்கவே மாட்டேன்,'' என்றார் உணர்ச்சிகரமாக.
குமார் கூறுகையில், ''கஷ்டத்தின் சூழலில் வளர்ந்தவன் நான். அதனால் பிறர் படும் கஷ்டங்கள் நன்கு தெரியும். தினமும் ஏதாவது ஒரு வகையில், ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் உதவி வருகிறேன். வேசம்மாவுக்கு உதவியது மிகப்பெரிய மகிழ்ச்சி,'' என்றார்.
ஈச்சனாரியில், 'ரியல் டெக் இன்ஜினியர்ஸ்' நிறுவனம் வைத்துள்ள இவர், 'கொசிமா' செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

