/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூட் அணிந்து இருக்கும் போது எத்தனை பட்டன் போடலாம்?
/
சூட் அணிந்து இருக்கும் போது எத்தனை பட்டன் போடலாம்?
சூட் அணிந்து இருக்கும் போது எத்தனை பட்டன் போடலாம்?
சூட் அணிந்து இருக்கும் போது எத்தனை பட்டன் போடலாம்?
ADDED : நவ 16, 2025 12:43 AM

நம்மில் பலருக்கும் சூட் அணிந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று, ஸ்டைலாக வலம் வர ஆசை இருக்கும். ஆனால், சூட் அணிவதில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை கவனித்தால் மட்டுமே, அந்த நேர்த்தியான தோற்றம் கிடைக்கும் என்கிறார், ஆடை வடிவமைப்பாளர் அபு.
இது ரொம்ப முக்கியம் சூட் அணியும்போது பலரும் செய்யும் தவறு, பட்டன் போடும் விதம் தான். நீங்கள் நின்று கொண்டிருந்தால், உங்கள் சூட் பட்டனை போட்டிருக்க வேண்டும். அதுவே, நீங்கள் அமரும்போது, பட்டனை கழற்றிவிட வேண்டும்.
இரண்டு பட்டன்கள் உள்ள சூட் என்றால், மேல் பட்டனை மட்டும் போட்டால் போதும். கீழ் பட்டனை எப்போதும் போட வேண்டாம். மூன்று பட்டன்கள் இருந்தால், நடுவில் உள்ள பட்டனை மட்டும் போட்டால் போதுமானது.
ஸ்லீவ் மற்றும்பேன்ட்ஸ் பிட்டிங் உங்கள் தோற்றத்தை மெருகேற்றுவதில், 'பிட்டிங்' முக்கியம். சூட் ஸ்லீவின் நீளத்தை விட, உள்ளே அணியும் சட்டையின் கை (ஸ்லீவ்) சற்று நீளமாக இருக்க வேண்டும். உங்கள் மணிக்கட்டில் சட்டை சற்று வெளியே தெரிய வேண்டும். இதற்கு டெய்லர் பிட் சிறந்தது.
பேன்ட்சின் நீளம், நீங்கள் அணிந்திருக்கும் ஷூவை தொடக்கூடாது. கணுக்காலுக்கு சற்று மேலே, நீங்கள் அணிந்திருக்கும் சாக்ஸ் வெளியே தெரியும் அளவுக்கு, சிறிய இடைவெளி இருப்பது நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.
நீங்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் அணியும் ஜாக்கெட், பேன்ட்ஸ் மற்றும் ஷூ ஆகிய மூன்றும், ஒரே நிறத்தில் இருப்பது போன்று பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்களை கூட்டத்தில் தனித்து காட்டும்.

