ADDED : பிப் 25, 2024 10:36 PM
மேட்டுப்பாளையம்;ஆன்மிகத்தில் சிறப்பாக பணியாற்றிய, இருவருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜனை சமாஜம் சார்பில், பஜனை மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆன்மிகத்தில் சிறப்பாக பணியாற்றி, பொது சேவை செய்த இருவருக்கு, பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது.
விழாவின் துவக்க நிகழ்ச்சியான கணபதி ஹோமம், மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கு காட்டூர் ஐயப்பன் பஜனை சமாஜம் துணைத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். தலைவர் துளசிதாஸ் வரவேற்றார்.
ஆன்மிகத்தில் சிறப்பாக பணியாற்றி, பொது சேவைகள் செய்து வரும், என்.எஸ்.வி. ராமசாமி விஜயலட்சுமி, ஏசியன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி சேர்மன் செல்வராஜ் சாவித்திரி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சமாஜம் நிர்வாகி உதயகுமார் நன்றி கூறினார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

