/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆ- குறுமைய கபடி போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் அபாரம்
/
ஆ- குறுமைய கபடி போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் அபாரம்
ஆ- குறுமைய கபடி போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் அபாரம்
ஆ- குறுமைய கபடி போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் அபாரம்
ADDED : ஆக 06, 2025 10:31 PM

கோவை; கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில் நடந்துவரும், ஆ-குறுமைய விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, கபடி போட்டி நடந்து வருகிறது. சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளியில் மாணவியருக்கு நடந்த போட்டிகளை, பள்ளி முதல்வர் குளோரி லதா துவக்கிவைத்தார்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான இறுதிப்போட்டியில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி(ரத்தினபுரி) அணி, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி அணி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (மணியக்காரன்பாளையம்) அணியை வென்றது. 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி அணி, சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.