/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடி போட்டியில் பி.ஏ. பள்ளி வெற்றி
/
கபடி போட்டியில் பி.ஏ. பள்ளி வெற்றி
ADDED : ஆக 13, 2025 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையிலான, கோவை சகோதயா கூட்டமைப்பு சார்பிலான கபடி போட்டி, கருமத்தம்பட்டி கோவை பப்ளிக் பள்ளியில் நடந்தது. அதில், 19 வயது மாணவியர் பிரிவு போட்டியில், பொள்ளாச்சி பி.ஏ. இன்டர்நேஷனல் பள்ளி மாணவியர் அணியும் பங்கேற்றது.
இறுதி போட்டியில், கோவை பப்ளிக் பள்ளியை எதிர்கொண்ட பி.ஏ. பள்ளி அணி, 42-32 புள்ளிக் கணக்கில் வென்றது. இதன் வாயிலாக, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றனர். பள்ளி தலைவர் அப்புக்குட்டி, அணி வீராங்கனையருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.