/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
/
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ADDED : டிச 04, 2024 10:17 PM
மேட்டுப்பாளையம்; பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினம் ஆண்டுதோறும் டிச., 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாளை பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
இதுதவிர, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களிலும், போலீசார் சோதனை நடத்தினர். ரயில்களில் வந்த பயணிகளின் உடமைகளும் கடும் சோனைக்கு உட்படுத்தப்பட்டன.