ADDED : ஏப் 05, 2026 06:23 AM

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்: n பேபி கார்ன் - 6, n கடலை மாவு - அரை கிண்ணம், n அரிசி மாவு - அரை கிண்ணம், n மிளகாய் துாள் - 2 ஸ்பூன், n பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, n எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் மூடி தனியே வைக்கவும். பின்னர், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், பெருங்காயத்துாள், உப்பு சேர்த்து, தண்ணீர் வீட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில், தோய்த்து, எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். இதேபோன்று வாழைக்காய், கத்தரிக்காய், குடமிளகாய், உருளைக் கிழங்கு, வெங்காயம், ஆகியவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.
