/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமசாமி லே-அவுட்டில் தரமற்ற ரோடு மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
/
ராமசாமி லே-அவுட்டில் தரமற்ற ரோடு மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
ராமசாமி லே-அவுட்டில் தரமற்ற ரோடு மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
ராமசாமி லே-அவுட்டில் தரமற்ற ரோடு மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
ADDED : பிப் 17, 2024 02:23 AM

கோவை:சாய்பாபா காலனி அருகே ராமசாமி லே-அவுட் பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் ரோடு பெயர்ந்து தரமற்ற நிலையில் காணப்படுகிறது.
மாநகராட்சி, 44வது வார்டு சாய்பாபா காலனி பகுதியில் ராமசாமி லே-அவுட் உள்ளது.
இப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ரோடு போடப்பட்ட நிலையில் குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் தற்போதே பெயர்ந்து வருகிறது.
நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் பள்ளம் ஏற்படும் அளவுக்கு தரமற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'இங்கு சுமார், 10 அடி ரோடு போட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. நீண்ட காலமாக இங்கு ரோடு போடாததால் மேடு, பள்ளமாக இருந்தது. மழை காலங்களில் பெரும் சிரமங்களை சந்தித்தோம். இப்படியிருக்க, ரோடு போடும்போதே 'வெட்மிக்ஸ்' போடுமாறு வலியுறுத்தினோம். ஆனால், முறையாக ரோடு போடாததால் பெயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.