/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் முன்பு கெட்ட நாற்றம்... இப்ப நல்ல முன்னேற்றம்! கொட்டும் குப்பை 80 டன் ஆக குறைந்தது
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் முன்பு கெட்ட நாற்றம்... இப்ப நல்ல முன்னேற்றம்! கொட்டும் குப்பை 80 டன் ஆக குறைந்தது
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் முன்பு கெட்ட நாற்றம்... இப்ப நல்ல முன்னேற்றம்! கொட்டும் குப்பை 80 டன் ஆக குறைந்தது
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் முன்பு கெட்ட நாற்றம்... இப்ப நல்ல முன்னேற்றம்! கொட்டும் குப்பை 80 டன் ஆக குறைந்தது
UPDATED : அக் 02, 2024 07:54 AM
ADDED : அக் 01, 2024 11:29 PM

கோவை : வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரை தினமும் 650 டன் குப்பை கொட்டப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது 80 டன் மட்டுமே கொட்டப்படுகிறது. பழைய குப்பையை, 'பயோமைனிங் பேஸ்-2' திட்டத்தில், விஞ்ஞான பூர்வமாக அழிக்க, ரூ.69 கோடியில் 'பயோ காஸ் பிளான்ட்' அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தின் ஒரு பகுதியில் கொட்டப்படுகிறது. அதன் சுற்றுப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், கிடங்கை வேறிடத்துக்கு மாற்றக்கோரி, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
மாநகராட்சியால் என்னென்ன பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதற்காக, 98 பக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், 2018 வரை கொட்டிய பழைய குப்பையை அழிக்கவே, மாநகராட்சி முயற்சிக்கிறது.
2019க்கு பின் தற்போது (2024) வரை, கொட்டியுள்ள குப்பை மலைக்குன்று போல் குவிந்திருக்கிறது; இவற்றை அழிப்பது எப்போது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
'பயோமைனிங் பேஸ்-2' திட்டத்தில், குப்பையை விஞ்ஞான முறையில் அழிக்க முடிவெடுக்கப்பட்டது. கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில், பெரும்பாலான குப்பை எரிந்தது. தேங்கியுள்ள குப்பையை மறுஅளவீடு செய்தால் மட்டுமே, எவ்வளவு டன் தேங்கியிருக்கிறது என்பதை அறிய முடியும்.
உருவாகும் இடத்தில் அழிப்பு
வெள்ளலுாரிலேயே குப்பையை, தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்க முடியாது. நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பையை அங்கு கொட்டினால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிப்பதை ஏற்க முடியாது. அதனால், குப்பை உருவாகும் இடத்திலேயே அழிப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மக்கும் குப்பை மட்டும் 270 முதல், 320 டன் தனியாக சேகரித்து, உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்புகிறோம். 200 டன் மக்காத குப்பை தனியாக சேகரமாகிறது; அதை தனியார் நிறுவனத்துக்கு வழங்குகிறோம். குப்பையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு, 100 டன் மக்கும் குப்பை வழங்குகிறோம். எம்.சி.சி., மையங்களில், 70 டன் குப்பை கையாளப்படுகிறது.
'பயோ கியாஸ் பிளான்ட்'
நாளொன்றுக்கு, 250 டன் மக்கும் குப்பையை கையாளும் வகையில், 69 கோடி ரூபாயில் 'பயோ காஸ் பிளான்ட்' வரப்போகிறது; டெண்டர் கோர இருக்கிறோம். ஓராண்டு, மூன்று மாதங்களுக்குள் 'பிளான்ட்' அமைத்து, பணி துவக்கப்படும். 800 டன் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது; விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நிதி ஒதுக்கீடு பெற்று டெண்டர் கோரப்படும்.
இதற்கு, இன்னும் மூன்று மாதங்களாகும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையையும் சேகரித்து, மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஞ்ஞான பூர்வமாக குப்பை மேலாண்மை செய்ய இருக்கிறோம். இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

