/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு பூப்பந்து போட்டி
/
ஆசிரியர்களுக்கு பூப்பந்து போட்டி
ADDED : டிச 24, 2024 07:12 AM
கோவை; ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டிக்கு, அணிகளிடம் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ண இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், இன்ஜி., கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்களுக்கு இடையே, 19வது ஆண்டு எஸ்.என்.ரங்கசாமி நாயுடு நினைவு பூப்பந்து போட்டி நடக்கிறது.
அடுத்தாண்டு ஜன.,4ம் தேதி, கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில், பங்கு பெறும் அணிகள் ஜன., 2ம் தேதி வரை, 98421 17374 என்ற மொபைல் போன் எண்ணில், முன்பதிவு செய்யலாம். pd@srec.ac.in என்ற இணையதள முகவரியிலும், முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவுக்குகட்டணம் கிடையாது. வெற்றிபெறும் முதல் நான்கு அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் தெரிவித்தார்.