/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா
/
ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா
ADDED : ஆக 04, 2025 08:21 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை இரவு நேரத்தில் உலா வந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்கபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி இந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகுபலி யானை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப்பகுதிக்குள் சென்றிருந்த பாகுபலி நேற்று முன்தினம் இரவு மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊட்டி சாலையில் உலா வந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.