/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை கண்காணிப்பில் பாகுபலி யானை
/
வனத்துறை கண்காணிப்பில் பாகுபலி யானை
ADDED : ஜூன் 11, 2025 09:02 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் உலா வரும் பாகுபலி யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, குரும்பனூர், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், சமயபுரம், காந்தையூர், லிங்காபுரம், உழியூர், மொக்கை மேடு என பல்வேறு பகுதிகளில் பாகுபலி எனப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையில் உலா வந்த பாகுபலி யானை, அதன் பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
தற்போது மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் தென்படுகிறது. மேட்டுப்பாளையம் சமயபுரம் அருகே சுக்கு காபி கடை பகுதியில், இரவு நேரத்தில் பாகுபலி யானை அவ்வப்போது உலா வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாகுபலி யானை ஊட்டி சாலையில் உலா வர வாய்ப்புள்ளது.
வாகன ஓட்டிகள் ஊட்டி சாலையில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும், என்றனர்.--------------