'பேலட் ஷீட்' பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
'பேலட் ஷீட்' பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 19, 2026 03:56 PM
சூலூர்: சூலூர் தொகுதியில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணியை, தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா ஆய்வு செய்தார்.
சூலூர் தொகுதியில், 385 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 462 பேலட் யூனிட் இயந்திரங்கள், 462 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 500 வி.வி.பேட் இயந்திரங்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது.
பேலட் யூனிட்டில் வேட்பாளர் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் ஷீட்' பொருத்தும் பணியை, சூலூர் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா ஆய்வு செய்தார்.
பேலட் ஷீட் பொருத்தும் பணி முடிந்தபின், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. அதன்பின், அனைத்து இயந்திரங்களும், இரு ஸ்டிராங் ரூம்களில் வைக்கப்பட்டு, கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.
