/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நட்சத்திர ஆமை விவகாரத்தால் கல்லாறு ஆற்றுக்கு செல்ல தடை
/
நட்சத்திர ஆமை விவகாரத்தால் கல்லாறு ஆற்றுக்கு செல்ல தடை
நட்சத்திர ஆமை விவகாரத்தால் கல்லாறு ஆற்றுக்கு செல்ல தடை
நட்சத்திர ஆமை விவகாரத்தால் கல்லாறு ஆற்றுக்கு செல்ல தடை
ADDED : டிச 08, 2025 05:27 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும், கல்லாறு ஆற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நட்சத்திர ஆமை விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் நட்சத்திர ஆமை கல்லாறு ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள கல்லாறு ஆற்றுக்கு செல்ல, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கல்லாறு வனப்பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நட்சத்திர ஆமை உள்ளிட்ட பிற வனவிலங்குகளை தேடி கல்லாறு வனப்பகுதிக்கு, வேட்டை கும்பல்கள் இச்சம்பவத்தின் வாயிலாக வர வாய்ப்புள்ளது.
எனவே, இப்பகுதியில் அத்துமீறி யாரும் நுழையக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.---