/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 முதல் 10ம் தேதி வரை குடிநீர் வினியோகம் தடை
/
8 முதல் 10ம் தேதி வரை குடிநீர் வினியோகம் தடை
ADDED : அக் 06, 2024 03:35 AM
கோவை : கோவை மாநகராட்சியில், பில்லுார் மூன்றாவது திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில், வரும், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை, குடிநீர் வினியோகம் தடைபடும்.
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு, பில்லுார் மூன்றாவது திட்டத்தில் குடிநீர் பெறப்படுகிறது. பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மருதுார் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில், மாதாந்திர மின் பராமரிப்பு பணி வரும், 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால், அன்றைய தினம் காலை முதல் மின் வினியோகம் தடைபடும். 8ம் தேதி காலை, 6:00 முதல் பில்லுார் மூன்றாம் திட்டத்தில், குடிநீர் பெறப்படும் பகுதியில் தடை ஏற்படும்.
அதைத்தொடர்நது, பில்லுார் மூன்றாவது திட்ட உள்கட்டமைப்பு பகுதியில், 9ம் தேதி (புதன்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணி நடக்கிறது.
எனவே, துடியலுார், வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம், வடவள்ளி, குறிச்சி மற்றும் குனியமுத்துார் ஆகிய பகுதிகளுக்கு, 9ம் தேதி மற்றும், 10ம் தேதி குடிநீர் வினியோகம் தடைபடும்.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.