/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மயோனெய்ஸ்' விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத்துறையின் உறக்கம் கலைகிறது

ADDED : ஏப் 26, 2025 11:14 PM
கோவை: தமிழக அரசு, சமைக்கப்படாத முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனெய்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. கோவையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், இதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன.
சமைக்கப்படாத முட்டையில் உள்ள பாக்டீரியாக்கள் உடலில், தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதால், இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உணவு பாதுகாப்புத்துறை சார்பில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, விழிப்புணர்வு பணிகளை அனைத்து கடைகள், பேக்கரிகளில் ஏற்படுத்தவுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், '' மயோனெய்ஸ் தயாரிப்பில், சால்மொனெல்லா போன்ற பாக்டீரியா, கிருமி தொற்று ஏற்பட்டு, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேக வைக்காத முட்டையில் இருந்து மயோனெய்ஸ் தயாரிப்பதோ, விற்பனை செய்யவோ கூடாது.
இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். முட்டை இல்லாமல் தயாரிக்கும் மயோனெய்ஸ் விற்பனை செய்ய தடையில்லை,'' என்றார்.
இப்போதுதான் தெரிந்ததா?