/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
/
கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : பிப் 16, 2024 12:53 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவியில் நீர்வரத்து குறைந்து உள்ளதால், இன்று முதல் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவியில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்தாண்டு வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகள், மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது, மழைப்பொழிவு இல்லாத சூழலில், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது; சுற்றுலா பயணியர் குளிக்கும் அளவுக்கு நீர் வரத்து இல்லை என்பதால் வனத்துறை தடைவிதித்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'கவியிருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா பயணியருக்கு 16ம் தேதி (இன்று) முதல் தடை விதிக்கப்படுகிறது,' என்றனர்.