ADDED : ஆக 29, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்; கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து, மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை, சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சிறுவாணி அடிவாரத்தில் 9 மி.மீ. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 48 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 41.89 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.