/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று முடிவது, ஏன் எப்போதும் முடியாது?
/
இன்று முடிவது, ஏன் எப்போதும் முடியாது?
ADDED : ஆக 29, 2025 01:43 AM
போத்தனூர்; கோவை சுந்தராபுரம், போத்தனூர், குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், குறிச்சி குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
இதனையொட்டி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஆத்துபாலம் நோக்கி வரும் வாகனங்கள் தக்காளி மார்க்கெட் எதிரே வலதுபுறம் திரும்பி, சாரதா மில் சாலை, போத்தனூர் மெயின் ரோடு, குறிச்சி பிரிவு வழியாக ஆத்துபாலம் சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக சுந்தராபுரம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 100 மீட்டர் தொலைவில் சென்றடையும் இடங்களுக்கு கூட, ஒரு கி.மீ., சுற்ற வேண்டிய நிலை நிலவுகிறது. இன்று தக்காளி மார்க்கெட் எதிரே வாகனங்கள் திரும்ப அனுமதிக்கப்பட்டது போல, முன்னரே அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் செவி சாய்க்கவில்லை.
தற்போது போலீசாரின் பணிச்சுமை கூடும் என்பதால் வாகனங்கள் திரும்ப அனுமதிப்பது எவ்வகையில் நியாயம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் இனி வரும் நாட்களிலாவது வாகனங்கள் இவ்விடத்தில் திரும்ப அனுமதிக்கவேண்டும். போலீஸ் கமிஷனர் மனது வைப்பாரா?