/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாரச்சந்தைகளை தடை செய்யுங்கள்! வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்
/
வாரச்சந்தைகளை தடை செய்யுங்கள்! வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்
வாரச்சந்தைகளை தடை செய்யுங்கள்! வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்
வாரச்சந்தைகளை தடை செய்யுங்கள்! வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்
ADDED : ஏப் 09, 2025 06:55 AM
கோவை; 'கோவையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தைகளை தடை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், வாரச்சந்தை என்கிற பெயரில் சாலையை ஆக்கிரமித்து, தரைக்கடைகள் நடத்தப்படுகின்றன.
இதற்கு மாநகராட்சிக்கு வியாபாரிகள் சுங்கம் செலுத்துவதில்லை. மாறாக, அந்தந்த பகுதிகளை சேர்ந்த கட்சியினர், குறிப்பிட்ட தொகையை மாமூலாக வசூலிக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, இப்பிரச்னைக்கு தீர்வு காணாமல், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக, புற்றீசல் போல், நகரெங்கும் சந்தைகள் பெருகி விட்டன. வார்டுக்கு மூன்று வீதம், 300 இடங்களில் சந்தை நடத்தப்படுவதால், குறுக்கு வீதிகளில் சிறு மளிகை கடைகள் அழிந்து வருவதாக, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட தலைவர் லிங்கம் கூறியதாவது:
கோவையில் வாரச்சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும். ஏனெனில், சிறிய அளவில் பெட்டிக்கடை, மளிகை கடை, ஓட்டல் நடத்த வேண்டுமெனில் லைசென்ஸ் வாங்குகிறோம். மாநகராட்சியில் குப்பை வரி செலுத்துகிறோம்.
சட்டத்துக்கு புறம்பாக, 300 இடங்களில் சந்தை நடத்தப்படுகிறது. இங்கு கடை நடத்தும் வியாபாரிகளுக்கு வரி விதிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு சந்தையில் ஒரு டன் குப்பை உருவாகிறது; 300 இடங்களில், 300 டன் குப்பை உருவாகிறது.
எங்களை போல், அவ்வியாபாரிகளிடமும் லைசென்ஸ் மற்றும் குப்பை வரி வசூலியுங்கள். இல்லையெனில், அவர்களை போல் எங்களிடம் வரி வசூலிக்காமல் இலவசமாக அனுமதியுங்கள். நாங்களும் குறைந்த விலையில், மக்களுக்கு பொருட்கள் வழங்குவோம். அனுமதியற்ற சந்தைகளால் சில்லறை மளிகை கடைகள் அழிந்து விட்டன.
இவ்வாறு, அவர் கூறினார்.

