/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேமல் நோயால் வாழை பாதிப்பு; தடுப்பு வழிமுறை அவசியம்
/
தேமல் நோயால் வாழை பாதிப்பு; தடுப்பு வழிமுறை அவசியம்
தேமல் நோயால் வாழை பாதிப்பு; தடுப்பு வழிமுறை அவசியம்
தேமல் நோயால் வாழை பாதிப்பு; தடுப்பு வழிமுறை அவசியம்
ADDED : நவ 08, 2024 11:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை, நெல், மக்காச்சோளம், சோளம் என, தானியப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் சிலர், இலை அறுவடை செய்வதற்கான வாழை ரகத்தையும் சாகுபடி செய்கின்றனர்.
இந்த வாழை இலைகள், கேரள மாநிலம், கோவை, திருப்பூர் என பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், அவ்வப்போது, வாழையை தாக்கும் தேமல் நோயால், மகசூல் இழப்பால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து தோட்டக்கலை அதிகாரிகள், விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: கன்று நட்டது முதல் 14 மாதங்கள் வரை, தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு காற்றில் சாயாமல் அவ்வப்போது மண் அணைத்து பராமரிக்க வேண்டும்.
வாழையின் அடிப்பகுதி மற்றும் அதன் மைய நரம்பு இலைகளில், சுழல் வடிவ 'பிங்க்' கலந்த சிவப்பு நிற கோடுகள் காணப்படும். மஞ்சரி காம்புகளிலும் கோடுகள் காணப்படும்.
இந்த வைரஸ் அசுவினி பூச்சி, பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் வாயிலாக பரவுகிறது. களைகளை நீக்கி, நிலப்பரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட வாழைக்கன்றுகளை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
நோய் வருவதற்கு காரணமான அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த, 'பாஸ்போமிடான்' ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி அல்லது மெத்தில் 'டெமட்டான்' இரண்டு மில்லி மருந்துகளை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.