/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்முதல் விலை உயர்வு; வாழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
கொள்முதல் விலை உயர்வு; வாழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 10, 2024 11:42 PM
அன்னுார்; நேந்திரன் ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அன்னுார் மற்றும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், அல்லப்பாளையம், பசூர், குப்பேயாபாளையம் உள்ளிட்ட பகுதியில், 2000 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நேந்திரன் ரகமும் சில இடங்களில் கதலி மற்றும் ரோபஸ்டோ ரகமும் பயிரிடப்படுகிறது. இவற்றில், 90 சதவீதம் கேரளாவுக்கு வெட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. மற்றவை, உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் நேந்திரன் வாழைத்தார் ஒரு கிலோ, 15 ரூபாய்க்கு வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று விலை பேசி வெட்டி எடுத்துச் சென்றனர். சிறிது சிறிதாக கொள்முதல் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர்.
கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்துக்கு வரும் வியாபாரிகள் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார், 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நீண்ட நாட்களுக்குப் பின், தற்போது தான் நேந்திரனுக்கு ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் விலை கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது' என்றனர்.