/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூச்சிக்கொல்லியால் வாழை விவசாயம் பாதிப்பு; இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
/
பூச்சிக்கொல்லியால் வாழை விவசாயம் பாதிப்பு; இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
பூச்சிக்கொல்லியால் வாழை விவசாயம் பாதிப்பு; இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
பூச்சிக்கொல்லியால் வாழை விவசாயம் பாதிப்பு; இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : பிப் 05, 2025 12:20 AM

கருமத்தம்பட்டி; இயற்கை உரங்கள், பூஞ்சாண கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என, வாழை சாகுபடி கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை, சூலுார் சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், வாழை சாகுபடி கருத்தரங்கு, காடுவெட்டிபாளையத்தில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனரகத்தின் பயிற்சி பிரிவு தலைவர் ஆனந்த ராஜா, தோட்டக்கலை கல்லுாரி பழப்பயிர்கள் துறை தலைவர் அக்சில்யா, பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் செந்தில்வேல் ஆகியோர், வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள், பயன்படுத்த வேண்டிய உரங்கள், களை மேலாண்மை குறித்து விளக்கினர்.
தென்னையில் தேங்காயும், வாழையில் பழத்தையும் பெறும் நாம், அம்மரங்களின் கழிவுகளை எரித்து விடுகிறோம். அதை தவிர்க்க வேண்டும். அவற்றை மக்கச்செய்து உரங்களாக பயன்படுத்த பழக வேண்டும்.
காற்றால் வாழை சேதமடைவதை தடுக்க, முட்டுக் கொடுக்க வேண்டியது அவசியம். கன்றுகளை ஆழமாக நடுவது பாதுகாப்பானது. அதேபோல், வாழைக்கு மண் அணைப்பது முக்கியமானது. இதன்மூலம், வேர்கள் உறுதி பெறும். மண்ணில் பிடிப்புடன் இருக்கும். பலத்த காற்றுக்கு ஈடு கொடுத்து நிற்கும்.
வாழை நீண்ட கால பயிர் என்பதால், களைகள் அதிகம் வளரும். அவற்றை அகற்ற பூச்சி கொல்லிகளை பயன்படுத்தினால், வாழைக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூஞ்சாண கொல்லிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என, வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.
காடுவெட்டிபாளையம் உழவர் ஆர்வலர் குழுவினர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.