/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழை பொழிவால் வாழைத்தார் வரத்து சரிவு
/
கனமழை பொழிவால் வாழைத்தார் வரத்து சரிவு
ADDED : ஜூன் 25, 2025 09:52 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழை காரணமாக, வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று, செவ்வாழை கிலோ -- 70, நேந்திரன் --- 45, பூவன் --- 35, கதளி --- 30, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45, ரஸ்தாளி --- 60 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது செவ்வாழை கிலோ - - 5, கதளி --- 7, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேந்திரன் - 5 மற்றும் ரஸ்தாளி --10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கனமழை பெய்வதால், கடந்த இரண்டு வாரங்களாக வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. நேற்று வெளியூர் வரத்து மட்டுமே இருந்தது. வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் வருகையும் குறைவாக இருந்ததால் விற்பனையில் மந்தம் ஏற்பட்டது,' என்றனர்.