/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இது விவசாயிகளுக்காக... வாழைத்தார் விலை உயர்வு
/
இது விவசாயிகளுக்காக... வாழைத்தார் விலை உயர்வு
ADDED : ஜன 14, 2024 11:19 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் --- அன்னுார் சாலையில், நால் ரோட்டில் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடத்தப்படும். நேற்று ஏல மையத்துக்கு, சுமார் 2,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, ஏலமைய நிர்வாகி சின்ராஜ் கூறுகையில், ''கதலி ஒரு கிலோ ரூ.35, நேந்திரன் கிலோ ரூ.25 வரையிலும் விற்பனையாகின. பூவன் ஒரு வாழைத்தார் ரூ.300, ரஸ்தாலி ரூ.450, ரோபஸ்டா ரூ.300-, செவ்வாழை ரூ.500, கற்பூரவல்லி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டன.
வாழைத்தார்கள் விலை சற்று உயர்ந்து விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,'' என்றார்.---