/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்
/
வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 03, 2025 11:29 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து அதிகரித்து, விலையும் சரிந்ததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை (ஒரு கிலோ) --- 80, நேந்திரன் --- 30, கதளி --- 35, ரஸ்தாளி --- 40, பூவன் --- 37 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது செவ்வாழை, நேந்திரன், கதளி, ரஸ்தாளி போன்ற வாழைத்தார்கள் விலை கிலோவுக்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், பூவன் தார் மட்டும் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி வகை வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை.
வியாபாரிகள் கூறியதாவது, 'கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது வாழைத்தார்கள் கூடுதலாக வரத்து இருந்தது. வெளியூர் வரத்து இல்லை. வரும் நாட்களில் வாழைத்தார்கள் விலை அதிகரிக்கும்,' என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக மழை பொழிவின்றி, கடும் வெயில் நிலவியது. மேலும், வாழையில் வெள்ளை ஈ தாக்கத்தாலும், ஊசி வண்டு தாக்கத்தாலும் பாதிப்பு ஏற்பட்டது. இடுபொருட்கள், மருந்து செலவு தொகை அதிகரித்த விலையில், வாழைத்தார் விலை சரிந்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது,' என்றனர்.

