/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து சரிவு; செவ்வாழை விலை ஜிவ்
/
வாழைத்தார் வரத்து சரிவு; செவ்வாழை விலை ஜிவ்
ADDED : ஜூலை 24, 2025 08:28 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு மார்க்கெட்டில் வாழைத்தார்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் --- 40, பூவன் --- 37, கதளி --- 45, ரஸ்தாளி -- 48, சாம்பிராணி வகை வாழைத்தார்- -- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில், செவ்வாழை கிலோ -- 25, பூவன் --- 7 மற்றும் ரஸ்தாளி --- 8 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் வாழைத்தார் மட்டும் கிலோவுக்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மழை காரணமாக வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. மேலும், ஒரு சில வாழைத்தார் வகைகள் விலை அதிகரித்து காணப்பட்டது,' என்றனர்.