ADDED : மார் 18, 2026 09:00 PM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில், சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையின் போது, 1,200 நேந்திரன் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
தீத்திபாளையம் சேர்ந்தவர் குருசாமி; விவசாயி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன், நேந்திரன் வாழைக்கன்றுகள் நடவு செய்துள்ளார். நல்ல வளர்ச்சியடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தீத்திபாளையம் பகுதியில், சூறாவளி காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், 1,200 வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. தீத்திபாளையத்தில் கணேசன் என்பவரின் மாட்டு கொட்டகையும், சூறாவளி காற்றில் சேதமடைந்தது.
