/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தினர் பதுங்கல்: போலீசார் தீவிர சோதனை
/
வங்கதேசத்தினர் பதுங்கல்: போலீசார் தீவிர சோதனை
ADDED : ஜூன் 19, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை புறநகர் பகுதிகளில், சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதை கண்டுபிடிக்க, தொழிற்சாலைகளில் மாவட்ட போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உட்பட, நான்கு வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து எஸ்.பி., கார்த்திகேயன், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், ''வெளிமாநிலத்தவர் ஆதார் கார்டுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. சந்தேகப்படியான நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.