/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேச பெண் கோவையில் மீட்பு
/
வங்கதேச பெண் கோவையில் மீட்பு
ADDED : நவ 15, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்,26, உள்ளிட்ட பலர் சேர்ந்து, தெலுங்குபாளையத்தில் தங்கியிருந்து கட்டட வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு சமையல் செய்வதற்காக, புரோக்கர் வாயிலாக ஒரு பெண்ணை சம்சுதீன் வேலைக்கு அமர்த்தினர். அப்போது, அந்த பெண்ணை பல்வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி சித்ரவதை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். விசாரிக்கையில், வங்கதேசத்தை சேர்ந்த, 18 வயதுடைய அந்த பெண் ணை, சட்ட விரோதமாக அழைத்து வந்து, வேலைக்கு அமர்த்தியது தெரியவந்தது. சம்சுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வங்க தேச பெண், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

