sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

 வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 28, 2026 08:16 AM

Google News

ADDED : ஜன 28, 2026 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி பகுதியில், கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் எஸ்.பி.ஐ. வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப்பிரகாஷ், அலுவலக ஊழியர் சங்க துணை மண்டல செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

வங்கி ஊழியர்கள் கூறுகையில், 'கடந்த, 2023 டிச. 7ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த மத்திய அரசு நிதித்துறை தொடர்ந்து தாமதம் செய்கிறது.

ரிசர்வ் வங்கி, இன்சூரன்ஸ் துறைகள், ஐந்து நாள் வேலை முறையில் இயங்குகின்றனர். போதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்படாததாலும், அதிக பணிச்சுமையால் ஊழியர்கள் கோரிக்கையை முன்னெடுக்க போராடுகிறோம்,' என்றனர்.

வங்கிகள் ஸ்டிரைக்கால், நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் பலரும் வங்கி சேவையை பயன்படுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us